தமிழக செய்திகள்

யூடியூபர் சவுக்கு சங்கர் தாயார் காலமானார்

குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா காலமானார். வயது மூப்பு மற்றும் தொடர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த கமலா, இன்று மரணம் அடைந்தார். சவுக்கு சங்கர் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே சவுக்கு சங்கர் மீதான பல்வேறு வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகளால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தார். சவுக்கு சங்கர் மீதான வழக்குகளுக்கு சட்ட போராட்டமும் பெரிய அளவில் இவரே நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்

பிணை நிபந்தனைகளை மீறிய வழக்கில் தலைமறைவு ஆகியிருந்த சவுக்கு சங்கர் கடந்த வாரம் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை புழல் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார்.