தமிழக செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: யுவராஜ் மீதான விசாரணை 28-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக யுவராஜை போலீசார், நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு செல்வராஜ் வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் சென்று விட்டதால் நேற்று யுவராஜை நாமக்கல் கோர்ட்டிற்கு அழைத்து வரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT