சென்னை,
தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் (51) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
முதல்-அமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோட்-சூட்டில் வந்த ஜோசப் விஜய், இன்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்-சூட் அணிந்து வந்து பங்கேற்றார்.
இந்தநிலையில், முதல்-அமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.5 அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய 55 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புயில் ஈடுபடுவர். முதல்-அமைச்சர் பாதுகாப்பு குழுவில் 10க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு முதல்-அமைச்சருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் விஜய்க்கும் அதே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.