சென்னை,
மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்: 26-ம் தேதி நடைபெறும் என மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் இயக்க மறுசீரமைப்பின் இரண்டாம் கட்ட அமைப்பு சீரமைப்புப் பணிகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மண்டல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு, மத்தியசென்னை கிழக்கு, மத்திய சென்னை மேற்கு, தென்சென்னை கிழக்கு, தென்சென்னை மத்தியம், தென்சென்னை மேற்கு, திருவள்ளுர் வடக்கு, திருவள்ளுர் தெற்கு, ஆவடி மாநகர், செங்கல்பட்டு வடக்கு, செங்கல்பட்டு தெற்கு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்து 26.11.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
இயக்க மறுசீரமைப்பின் (SSA-2) ஒருங்கிணைப்பாளர் சா. பீட்டர் அல்போன்ஸ் தொடக்கி வைக்கிறார். சென்னை மண்டல பொறுப்பாளர் கே. சிரஞ்சீவி, கிளஸ்டர் பொறுப்பாளர்கள் கீழானூர் ராஜேந்திரன், தாம்பரம் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பயிற்சித்துறை சார்பாக பி. பாண்டியராஜன், சி. ஸ்ரீதரன், பி. கோபிகுமரன் ஆகியோர் இயக்கத்தின் வளர்ச்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி, உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்பை வலுப்படுத்துதல், மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு பரப்புரைகள், உள்ளுர் பிரச்சினைகள் மற்றும் தீர்வுக்காண அணுகுமுறைகள், சமூக ஊடகத்துறை மூலமாக பிரசாரம் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து காலை அமர்வில் பயிற்சி அளிப்பார்கள்.
பிற்பகல் அமர்வில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலும், இயக்க மறுசீரமைப்பு குறித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. நிறைவு பேருரையாற்றுகிறார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான குலாம் அகமது மிர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி, கே.எஸ். அழகிரி, கு. செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்தாரகை கத்பர்ட், தமிழ்நாடு அரசின் அமைச்சர் செ. ராஜேஷ்குமார், பெ. விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பு செயலாளர் நிவேதித் ஆல்வா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்கள் பல்ராம் நாயக், எம்.பி., பாலமுரி வெங்கட், எம்.எல்.சி., நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரவீன் சக்கரவர்த்தி, சசிகாந்த் செந்தில் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
பயிற்சி முகாமிற்கான ஏற்பாட்டினை மாவட்டத் தலைவர்கள் மதரம்மா கனி, கராத்தே ஆர். செல்வம், எம்.எம்.டி.ஏ. கோபி, டி. விஜய்சேகர், ஜோதி பொன்னம்பலம், கே.வி. திலகர், ஆர். சசிகுமார், காங்கை குமார், அப்துல் அமீதுபாபு, ஆர்.எஸ். செந்தில்குமார், ஜே.பி. பிரபு, எஸ்.ஏ. அருள்ராஜ் மற்றும் SSA-2 மாவட்ட பார்வையாளர்கள் வி.எம்.சி. மனோகரன், என்.கே. பகவதி, ஈ.பி. ரவி, ஏ. ரெங்கசாமி, ஆர். கிருஷ்ணன், கே. சங்கரபாண்டியன், வி. கார்த்திகேயன், எஸ்.வி. சரவணன், வி. முருகேசன், ஆர்.என். அமிர்தராஜா, கே. தென்னரசு, மக்கள் ஜி. ராஜன், டி.டி.கே. சித்திக் ஆகியோர் செய்கின்றனர்.
இப்பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மேற்கண்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். மண்டல் ஒருங்கிணைப்பாளர்கள் இப்பயிற்சி முகாமின் அவசியம் கருதி கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.