சென்னை,
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று முன்தினம் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “அதிமுகவில் இருந்து மிக விரைவில் 15 எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து வெளியேறுவார்கள்.
யார், யார் வருவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வில் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி.வேலுமணியும் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுகு எதிராக கவர்னர் அர்லேகரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து 15 பேர் வருவர் என அமைச்சர் கூறியது குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது என்றும் குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.