மீனம்பாக்கம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக 3 மீனவர்களையும் இலங்கை கடற்ப டையினர் கைது செய்தனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 3 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள், 3 மீனவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அவசரகால கடவு சீட்டுகள் வழங்கி விமானம் மூலம் கொழும்பில் இருந்து சென் னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையம் வந்த 3 மீனவர் களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் வாகனம் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.