தமிழக செய்திகள்

கோவை அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்சில் உல்லாசமாக இருந்த ஜோடி

வடவள்ளியில் மினிபஸ் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.

கோவை,

கோவை அருகே வடவள்ளியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மினிபஸ்கள் உள்ளிட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடவள்ளியில் மினிபஸ் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த மினிபஸ்சில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அந்த பஸ்சுக்குள் ஒரு இளம்பெண் மற்றும் இளைஞர் ஏறி உள்ளே சென்றனர். பின்னர் அந்த இளைஞர் பஸ்சுக்குள் இருந்த கண்காணிப்பு கேமரா அருகே இளைஞர் சென்று அதை வேறு பக்கம் மாற்றி திருப்பி வைக்கிறார். பின்னர் அந்த இளைஞர், இளம்பெண் ஆகியோர் சேர்ந்து பஸ்சுக்குள் தரையில் துணியை விரித்து படுத்துக்கொள்கின்றனர்.

பின்னர் உல்லாசத்தில் ஈடுபட்ட அந்த ஜோடி, சிறிது நேரம் அங்கேயே படுத்துக்கொண்டனர். சிறிது நேரம் கழித்து ஆடைகளை சரிசெய்த பின்னர் மீண்டும் அந்த ஜோடி பஸ்சை விட்டு கீழே இறங்கி, ஜாலியாக சென்றனர். பஸ் டிரைவர் மற்றும் நடத்துனருடன் மறுநாள் பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஜோடி யார், எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

இதற்கிடையே, அந்த ஜோடி பஸ்சுக்குள் ஏறுவது, துணி விரித்து கீழே படுப்பது, இளைஞர் கேமராவை வேறு பக்கத்தில் திருப்பி வைப்பது, பின்னர் ஆடைகளை சரிசெய்துவிட்டு கீழே இறங்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எனவே நிறுத்தப்பட்ட மினிபஸ்சில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட அந்த ஜோடி யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.