பெரும்பாவூர்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்று பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) கேரளாவிற்கு வருகிறார். இன்று காலை கொச்சிக்கு தனி விமானம் மூலம் வரும் ஜனாதிபதி ஆதிசங்கராச்சாரி யார் ஜென்ம பூமி ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்கிறார். மாலை 3 மணியளவில் குருவாயூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதனால் 3.30 மணி முதல் 4 மணி வரை குருவாயூரில் பக்தர்களுக்கான தரிசனம் தெற்கு நடையில் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. நாளை (சனிக் கிழமை) காலை கண்ணூரில் நடைபெறும் எழில் மலை கப்பல் படை தளத்தில் நடைபெறும் அதிகாரிகள் பாஸிங் அவுட் நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக அவர் பங்கேற்கிறார். அதன்பின்னர் டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதி வருகையையொட்டி கேரளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.