சென்னை,
மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு என்ற பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. மாநில அளவில் குவாரிகளை ஆய்வு செய்து வருகிறோம். விதிமீறல் குறித்து ஆய்வுக்குப் பின் தீர்வு காணப்படும். கிரானைட் குவாரிகள் திறப்பது தொடர்பாக பகுப்பாய்வு செய்து வருகிறோம்.
மதுரை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் கனிமவளக் கொள்ளை நடந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தியுள்ளோம். குவாரி ஊழல் தொடர்பான அறிக்கைக்காக காத்திருக்கிறேன். எல்லா குவாரிகளிலும் ஆய்வு நடக்கும்.
என கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு கூறியுள்ளார்.