முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடலையொட்டிய இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்த மக்களும் முருகனை தரிசிக்க கோவிலுக்கு படையெடுத்ததால் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை தரிசித்து சென்றனர். கடுமையான வெயிலுக்கு மத்தியிலும் கடற்கரையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.