தமிழக செய்திகள்

நாங்குநேரி தொகுதி: த.வெ.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

சென்னை,

234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை ) எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முடிவில் யார் அரியணையில் அமரப்போகிறார்கள் என்பது தெரியவரும். தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் 25 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் நாங்குநேரி தொகுதி தவெக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 16,419 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இறுதி வாக்கு எண்ணிக்கை:

ரெட்டியார்பட்டி நாராயணன் (த.வெ.க.) - 74,952 வாக்குகள்

ரூபி. மனோகரன் (தி.மு.க.) - 58,533 வாக்குகள்

இசக்கி முத்து (அமமுக) - 38,316

செல்வம் (நாதக) 17,618

SCROLL FOR NEXT