சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருவனந்தபுரம் கோட்டத்தில் மே மாதம் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், சென்னை - குருவாயூர் இடையே இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னையில் இருந்து குருவாயூருக்கு மே 2, 9-ந் தேதிகளில் காலை 10.40 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் வழியில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நின்று தாமதமாக செல்லும்.
இதே ரெயில், மே 4 மற்றும் 14-ந் தேதிகளில் வழியில் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.
இதேபோல், குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு மே 2, 28-ந் தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் வழியில் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.