தமிழக செய்திகள்

முதல்-அமைச்சரின் தனி செயலாளர்கள் நியமனம்

முதல்-அமைச்சரின் தனி செயலாளர்களாக செந்தில் குமார், லட்சுமி பிரியா நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மக்கள் முன்னிலையில் முதல்-அமைச்சர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் என்ற கோப்பில் முதல் கையொப்பமிட்டார் விஜய். அதனை தொடர்ந்து சென்னை கோட்டைக்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜயின் முதல் நிலை தனி செயலாளராக செந்தில் குமாரும், இரண்டாம் நிலை தனி செயலாளராக லட்சுமி பிரியாவும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செந்தில் குமார் சுகாதாரத்துறை செயலாளராகவும், லட்சுமி பிரியா ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராகவும் பதவி வகித்திருந்தனர்.