தமிழக செய்திகள்

ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிட ராகுல் காந்திக்கு முதல் அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்களவை எதிர்க்கட்சித தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலயில் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்தது. தவெக அமைச்சரவையில் காங்கிரசை சேர்ந்த இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.