செய்திகள்

பங்குச்சந்தை துளிகள் : நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள்

மாரிக்கோ நிறுவன பங்குகளை வாங்கலாம் என எச்.எஸ்.பீ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

* கெயில் இந்தியா பங்குகளை வாங்கலாம் என கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் கூறுகிறது இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.175-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை 2.32 சதவீதம் உயர்ந்து ரூ.105.65-ஆக இருந்தது.

* பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை விற்று விடலாம் என ஆம்பிட் கேப்பிட்டல் நிறுவனம் கூறி உள்ளது. மேலும், இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.20,600-ல் இருந்து) ரூ.19,250-ஆக குறைத்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.22,148.20-ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.17 சதவீதம் குறைவாகும்.

* உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் பங்கு பற்றிய மதிப்பீட்டை ஐ.ஐ.எப்.எல். செக்யூரிட்டீஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.56-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், புதன்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 0.10 சதவீதம் சரிந்து ரூ.48.80-ல் முடிவுற்றது.

* மாரிக்கோ நிறுவன பங்குகளை வாங்கலாம் என எச்.எஸ்.பீ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.400-ல் இருந்து) ரூ.370-ஆக குறைத்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.294.90-ல் முடிவுற்றது. செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 0.47 சதவீத சரிவாகும்.

* சிப்லா நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தொடர்ந்து பரிந்துரை செய்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,330-ஆக நிர்ணயம் செய்து இருக்கிறது. புதன்கிழமை வர்த்தகத்தில் இந்தப் பங்கு 4.40 சதவீதம் முன்னேறி ரூ.444.45-ஆக இருந்தது.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.