ஆரணி,
ஆரணி காந்தி ரோட்டில் வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. பகல், இரவு என எந்த நேரமும் இந்த பகுதி போக்குவரத்து இடையூறில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பாளர்களாலும் பிரச்சினைகள் உள்ளன. இந்த நிலையில் விபத்துகளை தவிர்க்கும் நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்.சிலை வரை சாலையின் மையத்தில் `சென்டர் மீடியன்' அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சென்டர்மீடியன்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 தினங்களுக்கு முன்பு இரவு மனித சங்கிலி போராட்டமும் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்களையும் அழைத்து இந்த கருத்துகளை அமைச்சர் எடுத்துரைத்தார்.