சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வேலூர் - 104.36° பாரன்ஹீட் (40.2°C)
சென்னை மீனம்பாக்கம் - 104.18° பாரன்ஹீட் (40.1°C)
கரூர் பரமத்தி - 103.64° பாரன்ஹீட் (39.8°C)
தஞ்சாவூர் - 102.2° பாரன்ஹீட் (39.0°C)
சென்னை நுங்கம்பாக்கம் - 101.66° பாரன்ஹீட் (38.7°C)
பாளையங்கோட்டை - 101.3° பாரன்ஹீட் (38.5°C)
திருச்சி - 101.3° பாரன்ஹீட் (38.5°C)
திருத்தணி - 101.3° பாரன்ஹீட் (38.5°C)
நாமக்கல் - 100.94° பாரன்ஹீட் (38.3°C)
மதுரை விமான நிலையம் - 100.4° பாரன்ஹீட் (38.0°C)