சென்னை,
சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை, உள் தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.