வானிலை செய்திகள்

தமிழகத்தின் 13 இடங்களில் சதமடித்த வெயில்

அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது. வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் 11 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவான இடங்களின் விவரம் வருமாறு;

1. திருச்சி - 105 டிகிரி பாரன்ஹீட்

2. வேலூர் - 104 டிகிரி பாரன்ஹீட்

3. ஈரோடு - 103 டிகிரி பாரன்ஹீட்

4. கரூர் பரமத்தி - 103 டிகிரி பாரன்ஹீட்

5. சென்னை மீனம்பாக்கம் - 102 டிகிரி பாரன்ஹீட்

6. மதுரை விமான நிலையம் - 102 டிகிரி பாரன்ஹீட்

7. தருமபுரி - 102 டிகிரி பாரன்ஹீட்

8. திருப்பத்தூர் - 102 டிகிரி பாரன்ஹீட்

9. நாமக்கல் - 102 டிகிரி பாரன்ஹீட்

10. மதுரை நகர் - 102 டிகிரி பாரன்ஹீட்

11. திருத்தணி - 102 டிகிரி பாரன்ஹீட்

12. தஞ்சை - 101 டிகிரி பாரன்ஹீட்

13. சேலம் - 101 டிகிரி பாரன்ஹீட்