சென்னை
தமிழகத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள சூழலில், பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. நடப்பு ஆண்டில் எல் நினோ பாதிப்புகளால் மழை பொழிவு குறையக்கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.
இந்த சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இதன்படி, தமிழகத்தின் திருவள்ளூர், அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திருப்பூர் மற்றும் நெல்லை மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.