சென்னை
தமிழகத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி சென்னை, செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இரவு 1 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.