கோப்புப்படம் 
வானிலை செய்திகள்

18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருப்பூர், திண்டுக்கல் உட்பட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் மத்திய மராட்டியம் வரை, தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT