சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி செல்சியசும், மதுரை நகரில் 103 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூரிலும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.