வானிலை செய்திகள்

தமிழகத்தின் 6 இடங்களில் சதமடித்த வெயில்

பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதனால் மதிய வேளைகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் இளநீர், தர்பூசனி மற்றும் ஜூஸ் கடைகளை நாடிச்செல்வதை காண முடிகிறது.

இதற்கிடையே, தமிழகத்தின் 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, திருச்சி, காரைக்கால், மதுரை நகரம் மற்றும் மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.