கோப்புப்படம் 
வானிலை செய்திகள்

தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் சதம்

அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104.54° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104.54° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை மீனம்பாக்கம் - 104.54° பாரன்ஹீட் (40.3°C)

திருத்தணி - 102.56° பாரன்ஹீட் (39.2°C)

கடலூர் - 102.38° பாரன்ஹீட் (39.1°C)

மதுரை நகரம் - 101.84° பாரன்ஹீட் (38.8°C)

தொண்டி - 101.84° பாரன்ஹீட் (38.8°C)

மதுரை விமான நிலையம் - 101.12° பாரன்ஹீட் (38.4°C)

சென்னை நுங்கம்பாக்கம் - 101.12° பாரன்ஹீட் (38.4°C)

வேலூர் - 100.76° பாரன்ஹீட் (38.2°C)

பரங்கிப்பேட்டை - 100.4° பாரன்ஹீட் (38.0°C)