புதுடெல்லி,
தெற்கு குஜராத்தில் இருந்து கர்நாடகா வரை சராசரி கடல் மட்டத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய தெற்கு வங்கதேசப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரத்தில் இருந்து 7.6 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வங்கக் கடலில் வடக்கு ஒடிஷா கடற்கரையை ஒட்டி உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் கனமழைக்கான வாய்ப்பு குறைவு தான்.
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும். தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின் உருவாகும் முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2-3 நாட்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.