வானிலை செய்திகள்

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

மழையால் வெப்பம் குறைந்து சீதோஷ்ண நிலை தமிழ்நாட்டில் சற்று மாறியுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தற்போது மழைக்கான சூழல் உருவாகி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் குறைந்து சீதோஷ்ண நிலை தமிழ்நாட்டில் சற்று மாறியுள்ளது.

இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கதேசம் பகுதியில் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை 5.30 மணி அளவில் இந்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தமிழ்நாட்டிற்கு இதனால் நேரடியாக எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT