அர்னாப் புயல் 
வானிலை செய்திகள்

ஏனாம் அருகே கரையை கடந்த அர்னாப் புயல்

புயல் கரையை கடந்தபோது புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

புதுச்சேரி,

புதுச்சேரியின் ஏனாம் அருகே அர்னாப் புயல் கரையை கடந்தது.

அர்னாப் புயல்

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் நிலவிய அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் மாலை 5.30 அளவில் தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் இரவு 11.30 மணி அளவில் மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது.

அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மிக தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது நேற்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது.

மிகக் கடுமையான சூறாவளி புயல் “அர்னாப்” மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஆந்திர கடற்கரையை அடுத்துள்ள பகுதியில் இருந்து கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு சுமார் 22 கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு அதே பகுதியில் மையப்படுத்தப்பட்டிருந்தது.

கரையை கடந்த புயல்

அதன் பிறகு, அர்னாப் புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் ஆந்திராவின் காக்கி நாடா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடந்தது. அர்னாப் புயல் கரையை கடந்தபோது புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

SCROLL FOR NEXT