வானிலை செய்திகள்

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகு திகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது

சென்னை,

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- சுமார் 3.1 மற்றும் 4.6 கி.மீ. உயரத்தில் கட லோர கர்நாடகம் மற்றும் கடலோர ஆந்திரம் வழியாக வளிமண்டல காற்ற ழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகு திகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மாவட்டங்கள், கோவை, தென்காசி, நெல்லை மாவட்டங்க ளின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

இதேபோல வருகிற 11-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகு திகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.