சென்னை,
நேற்று (24-02-2026) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25-02-2026) காலை 5.30 மணி அளவில் வலுவிழந்தது என்றும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதன்காரணமாக இன்று (25-02-2026) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
நீலகிரி,
கோவை,
கன்னியாகுமரி,
திருநெல்வேலி,
தேனி,
திண்டுக்கல்,
திருப்பூர்,
ஈரோடு,
கரூர்,
நாமக்கல்,
தென்காசி,
தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.