வானிலை செய்திகள்

12 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று காலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.