சென்னை,
தெற்கு குஜராத்திலிருந்து மத்திய கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.