சென்னை,
காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, குமரி, மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சை, தேனி, நீலகிரி, நெல்லை, தென்காசி, திருவாரூர், திருச்சி, கோவை, திருப்பூர் நாகை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.