சென்னை,
சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கடலூர், நாகை, கரூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.