சென்னை,
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, தென்காசி, தேனி, விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்ட மலை பகுதிகள் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.