வானிலை செய்திகள்

நெல்லை, குமரி உள்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர கர்நாடக பகுதிகளில் இருந்து கடலோர ஆந்திர பகுதிகள் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) முதல் ஜூன் 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) நீலகிரி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.