வானிலை செய்திகள்

9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அப்டேட்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 3-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.