கோப்புப்படம் 
வானிலை செய்திகள்

17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.