வானிலை செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மே வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் மழை

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம் , சென்னை சென்டிரல், கிண்டி, வில்லிவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

அதேவேளை, மழையால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவோர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT