வானிலை செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் மழை

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. அதன்படி, எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், மாம்பலம், நுங்கம்பாக்கம், கிண்டி, வடபழனி, ஈக்காட்டுதாங்கல், அண்ணாசாலை, கோடம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

SCROLL FOR NEXT