வானிலை செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

மழை காரணமாக நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது.

தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் மழை

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. சென்னை எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், அடையாறு, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மெரினா கடற்கரை, மயிலாப்பூர், நங்கநல்லூர், வேளச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இந்த மழை காரணமாக நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT