வானிலை செய்திகள்

வங்கக்கடலில் வருகிறான் அக்வான்...வானிலை கொடுத்த அப்டேட்

'அக்வான்' புயல் சின்னத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

வங்கக் கடலில் அடுத்தடுத்து 'ஒர்னாப்' மற்றும் 'முரசு' புயல்கள் உருவான நிலையில் தமிழகத்துக்கு போதிய மழை கிடைக்கவில்லை. கடலோர மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்தது.

இந்த நிலையில் வங்கக் கடலில் மற்றும் ஒரு புயல் உருவாவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 13-ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 15-ஆம் தேதி புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது புயலாக மாறினால் ஈரான் பரிந்துரைத்த 'அக்வான்' எனப் பெயரிடப்படும். இதன் காரணமாக நவம்பர் 15 முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்வான்' புயல் சின்னத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT