சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவதுல்
”கிழக்கு பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.இது மேலும் மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடலை நோக்கி இந்திய பெருங்கடல் அருகே வரை நகரும்.
இதன் காரணமாக நாளை (புதன்கிழமை) முதல் 21-ந் தேதி வரை தமிழ கத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கன மழை, மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை. 2002-ம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.