வானிலை செய்திகள்

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிவிட்டதக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அத்துடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தேனி, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT