சென்னை,
வங்கக்கடலில் நாளை அக்வான் புயல் உருவாக உள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், பெரம்பூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.