வானிலை செய்திகள்

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்..? - விவரம்

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 3 மாவட்டங்களில் மிதமான மழையும், 16 மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 16 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT