சென்னை,
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எல் நினோ தற்போதைய நிலை மற்றும் எதிர்கால மாற்றம் குறித்து ஆய்வு செய்து அறிவித்துள்ளது. தற்போது பசிபிக் பெருங் கடலில் எல்நினோ நிலை உள்ளது மற்றும் இது எதிர்காலத்தில் அதிக வலுப்பட வாய்ப்பு உள்ளது. பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 28 செல்சியஸ் டிகிரியாக இருக்கும். இந்த வெப்ப நிலையில் இருந்து 0.5 கூடினால் எல் நினோ உருவானதாக அர்த்தம். தற்போது பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளன. அடை யாளக் குறியீடு 28 செல்சி யஸ் டிகிரியில் இருந்து 0.5 அதிகரித்துள்ளன.
ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காலாண்டில் மிதமான முதல் வலுவான எல்நினோ நிலையை காட்டு கின்றன. தற்போதைய ஆய்வுகள் மற்றும் கணிப்பு கள் இந்த ஆண்டு கடைசியில் எல் நினோ வலுப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பாகவே உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நிலவரங்களை கண்காணித்து வருவதாக தெரிவித் துள்ளது. பசுபிக் பெருங்கடலில் எல்நினோ உருவானதால் தமிழகத்தில் மே தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்யக்கூடும். வெப்பம் அதிகரிக்கும். வெப்ப நிலை அதிகமாகும் பட்சத்தில் அசவுகரியங்கள் ஏற்படும்.