வானிலை செய்திகள்

தமிழகத்தின் 6 இடங்களில் இன்று சதம் அடித்த வெயில்!

அதிகபட்சமாக திருச்சியில் 103.5° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:

  1. ஈரோடு – 101.1°F

  2. பாளையங்கோட்டை – 101.1°F

  3. தஞ்சாவூர் – 100.4°F

  4. திருச்சி – 103.5°F

  5. திருத்தணி – 100.6°F

  6. வேலூர் – 100.9°F