சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-
வேலூர் - 104.72° பாரன்ஹீட் (40.4° செல்சியஸ்)
திருச்சி - 104.18° பாரன்ஹீட் (40.1° செல்சியஸ்)
ஈரோடு - 103.28° பாரன்ஹீட் (39.6° செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)
தஞ்சாவூர் - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்)
கரூர் பரமத்தி - 101.66° பாரன்ஹீட் (38.7° செல்சியஸ்)
நாமக்கல் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)
மதுரை விமான நிலையம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)
திருத்தணி - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)