சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:
மதுரை விமான நிலையம் - 104.36° பாரன்ஹீட் (40.2° செல்சியஸ்)
மதுரை நகரம் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)
திருச்சி - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்)
சென்னை நுங்கம்பாக்கம் - 101.84° பாரன்ஹீட் (38.8° செல்சியஸ்)
பரங்கிப்பேட்டை - 101.84° பாரன்ஹீட் (38.8° செல்சியஸ்)
நாகப்பட்டினம் - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)
வேலூர் - 100.04° பாரன்ஹீட் (37.8° செல்சியஸ்)